About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 21, 2011

இனி 1 முதல் 6-ம் வகுப்பு வரை ஒரே ஒரு பாடப்புத்தகம்!


சென்னை: மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

December 20, 2011

விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

சென்னை : விரும்பிய மொபைல் எண்ணை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது.

கல்விக்கான வீடியோ இணையதளம் : YOU TUBE அறிமுகம்



வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக திகழ்வது யூடியூப் ஆகும். சர்வதேச மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற யூடியூப் நிறுவனம், பள்ளி குழந்தைகளுக்காக, கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டு‌ம் கொண்ட இணைய‌தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

"யூடியூப் ஃபார் ஸ்கூல்ஸ்" என்ற பெயரில் இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. 4.5 லட்சம் எண்ணிக்கையிலான கல்வி தொடர்பான வீடியோக்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. பள்ளிகளில் ஸ்மார்‌ட்கிளாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், யூடியூப்பின் இந்த ‌சேவை ‌உற்ற பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

December 19, 2011

சிறப்பு ஆசிரியர் பணி விண்ணப்பிக்க டிச., 21 கடைசி

சிறப்பு ஆசிரியர் தற்காலிக பணிக்கென பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்க டிச.,21 அன்று கடைசிநாள் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் தோட்டக்கலை, வாழ்வியல் மற்றும் தகவல் திறன், "மேஷனரி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்' பாடங்களுக்கென தொகுப்பூதிய (மாதம் ரூ.5,000) அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப ஒப்படைக்க கடைசி நாள் டிச.,21. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக வழங்கவேண்டும்.

பகுதி நேர ஆசிரியர் பணிக்கு 1,624 பேர் விண்ணப்பிப்பு

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,624 பேர் விண்ணப்பித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் 809 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், 268 பேர் கலை பாடத்துக்கும், 268 பேர் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடத்துக்கும், 273 பேர் தொழிற்கல்வி பாடத்துக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.
இன்று முதல் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அவர்கள், வரும் 26ம் தேதி முதல் ஜன., 15 வரை நேர்முகத் தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒரே கிரகத்தின் சுற்றுவட்டபாதையில் 2 சூரியனகள்- நாசா தகவல்


நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி ஒரு கிரகத்தை சுற்றி 2 சூரியன்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளது அங்கு யாரும் வாழும் சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கிரகத்திற்கு கெப்ளர்-16b பெயரிடப்பட்டு உள்ளது, இது சனி போன்ற ஒரு வாழ்வதற்கே உகந்ததல்லாமல் குளிர் மாபெரும் வாயு, உள்ள கிரகமாக கருதப்படுகிறது.

December 18, 2011

வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு.





Youtube வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம்.

December 17, 2011

தொடக்கக் கல்வித்துறை‍ 21.12.2011& 22.12.2011 ஆசிரியர் கலந்தாய்வு

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 12118 /டி1/ 2011: 21.12.2011 ,22.12.2011 ஆகிய நாட்களில் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தக்கோறுதல் -அறிவுரைகள் சார்பு. 


http://www.box.com/s/kanrsafe6zbfit8jkuiq

9,399 புதிய ஆசிரியர்கள் நியமனம் பட்டியல் தயாரிக்கும் பணியில் பள்ளிக் கல்வி இயக்ககம் தீவிரம்


பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் வரும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 9,399 இடங்களில் புதிய ஆசிரியர் களை தெரிவு செய்து தர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், பள்ளிக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்!!


மனிதன் பூமியைத் தவிர வேறு எங்கு வாழ முடியும் என தன் தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளான். இந்தத் தேடலில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?  என்பது. இது குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளிக் கழகம் E.S.A Express விண்வெளி ஓடத்தை அனுப்பியுள்ளது. அதன் சக்தி வாய்ந்த camera செவ்வாய் கிரகத்தின் ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் வடகிழக்கில் மலைகளில் ஐஸ் கட்டிகள் வளைவுகளாக உறைந்து புதைந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இவை பனிப் பாறைகளாகவும் இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவுகிறது.

December 16, 2011

மார்ச் 8ல் பிளஸ் 2 தேர்வுகள்

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 8ம் தேதி துவங்குகிறது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 8ம் தேதி மொழித்தாள் ஒன்று, மார்ச் 9ம் தேதி மொழித்தேர்வு இரண்டாம் தாளும், மார்ச் 12, 13ம் தேதிகளில் ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 16ல் இயற்பியல், உளவியல் மற்றும் பொருளியல், 19ம் தேதி கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், மார்ச் 20ம் தேதி புவியியல், வணிகவியல், மனையியல் தேர்வுகளும், மார்ச் 22ம் தேதி சுருக்கெழுத்து, வேதியல், கணக்கு பதிவியல் தேர்வுகள், மார்ச் 26 உயிரியல், வரலாறு மற்றும் தாவரவியல், வணிக கணிதம், அடிப்படை அறிவியல் மார்ச் 28ம் தேதி இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், தட்டச்சு, சிறப்பு தேர்வுகள், தொடர்பு ஆங்கிலம் மற்றும் மார்ச் 30ம் தேதி புள்ளியில், நர்சிங் தேர்வுகள், பிரக்டிக்கல் தேர்வுகள், அரசியல் அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வுகள் எழுத கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

உயர்கல்வி பயில மருத்துவ சான்றின்பேரில் ஈட்டா விடுப்பை தவிர பிற விடுப்பை துய்க்கலாம் .தவகல் அறியும் உரிமை சட்ட விளக்கம் .

கணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச மென்பொருள்



கணினியின் பாதுகாப்பு பற்றி பலரும் அக்கறை கொள்வர். ஆகையால் தான் கணினியில் antivirus software மற்றும் பல மென்பொருட்களை நிறுவுகின்றார்கள். கணினியினைப் பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மென்பொருள் ADVANCED SYSTEM CARE. அதன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது.

December 14, 2011

இலவசமாக உங்கள் bio-data தயாரிக்க





resume banking website
வேலைவாய்ப்பு என்பதே இப்போது குதிரைக்கொம்பாகிவிட்ட இச்சூழலில் ஒவ்வொரு வேலைக்கும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன.  இந்தப் போட்டியில் வென்று வந்தால் தான் நமக்கு ஒரு நல்ல நிரந்தர வேலை கிடைக்கும். அத்தகைய வேலைவாய்ப்பைப் பெற முதலில் நாம் ஒரு நல்ல resume தயார் செய்ய வேண்டும்.  

December 13, 2011

முப்பருவத் தேர்வு முறை 2012‍‍-2013ஆம் ஆண்டிலிருந்து அமல்


2012-2013 ஆம் ஆண்டிலிருந்து வகுப்பு 1 முதல் 8 ஆம் வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறை தமிழக அரசு அறிவித்து அதற்கான ஆணை வெளியிட்டுள்ளது.
ஆணையை கீழே கிளிக் செய்க‌

http://www.box.com/s/mh8oouvg6r5jqdu71d5t

அரசாணை எண் : 193 நாள் 02.12.2011 அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு

அரசாணை எண் : 193 நாள் 02.12.2011 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 2011-2012 ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு
( பணியிட விவரங்கள் பாட வாரியாக , மாவட்ட வாரியாக )

  டவுன்லோட் செய்ய‌


நமது கணினி SPEED ஆக இயங்க மென்பொருள்

சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும். அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை. உங்கள் கணினி speed ஆக வேண்டுமா? இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது. அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC.

December 12, 2011

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா



லைவரின் 62 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.





ஜினி புதிதாய் பிறந்த வருடம் இது என்றால் மிகையல்ல. அதனால் அவர் பிறந்த பிறகு வந்து போன இந்த 61 ஆண்டுகளுக்கும் இல்லாத மகத்துவம் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் தந்த தெம்புடன் உலகமெங்கும் உள்ள  ரசிகர்கள் இந்த பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

December 11, 2011

நினைவூட்டும் இணைய தளம்

பரபரப்பான வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகளை நாம் மறந்து போகிறோம். அன்பானவர்களின் பிறந்த நாள், உற்ற தோழியின் திருமணம், வாங்கிய கடனுக்கு வங்கியில் பணம் செலுத்தும் நாள், கொடுத்த கடனுக்கு வட்டி வசூலிக்கும் நாள், வீட்டிற்கான வரிகள் செலுத்தும் நாள் என எத்தனையோ நாட்களை மறந்துவிட்டு பின் வருத்தப்படுகிறோம்.

December 10, 2011

கணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சேமித்து வைப்பதற்கு


உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தகூடிய இயங்குதளம் windows இயங்குதளம் தான். அந்த நிறுவனம் இப்பொழுது தனது புதிய பதிப்பான windows 8ன் சோதனைப்  பதிப்பை வெளியிட்டது.

December 9, 2011

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் ஆணை

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளிகள் - அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.


http://www.box.com/s/pu0vc5qdpihg11mkddsj

PDF கோப்புகளுக்கு Password உருவாக்க



PDF கோப்புகளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும் சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புகளை உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி? நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே கடவுச்சொற்களை (password) எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் கோப்புகளை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன. கடவுச் சொல்லுடன் கூடிய PDF கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.

இந்த வார டவுண்லோட் இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட

பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும், ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம் வாங்குகின்றனர்.சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை.

December 8, 2011

710 ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை


பள்ளிக் கல்வி - RMSA- 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்பட்டது.

710 உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை


G.O Ms. No. 198 December 7, 2011-பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.


http://www.box.com/s/opm18v6urnbpyip0xdz9

831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை


G.O Ms. No. 197 December 7, 2011-தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.




http://www.box.com/s/hhhpv70bot74qmunmaht

ஏ.இ.இ.ஓ., பணிக்கு கவுன்சிலிங்


சென்னை : நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் பெறுவதற்கான, கலந்தாய்வு சென்னையில்  நடக்கிறது.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்த மாதம் தீபத் திருவிழா என்பதால், கூடுதலான பக்தர்கள் கிரிவம் செல்வர். இதனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொள்வர். பவுர்ணமி கிரிவலம் வர வரும், 9ம் தேதி இரவு, 7.21 முதல், மறு நாள்,10ம் தேதி இரவு, 8.43 மணி வரை உகந்த நேரம் என, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : தேர்வு இயக்ககம் அறிவிப்பு


சென்னை : பிளஸ் 2, 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள், வரும் மார்ச் பொதுத் தேர்வில், தேர்ச்சி பெறாத எல்லா பாடங்களையும், சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் எழுதலாம் என, அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

December 7, 2011

710 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தல்




îIöèˆF™ 710 ï´G¬ôŠ ðœOè¬÷ àò˜G¬ôŠðœOè÷£è 2011-2012 Ý‡®™ îó‹ àò˜ˆîºîô¬ñ„꘠ªê™M ªüòôLàˆîóM†´œ÷£˜.îó‹ àò˜ˆîŠð´‹ Üó² àò˜G¬ôŠ ðœOèÀ‚°¹Fò õ°Šð¬øܽõôè õêFÜPMò™ ñŸÁ‹èEQ ÝŒõè‹Ëôè‹ àœO†ì õêFèÀ‚è£è412 «è£®«ò 65 ô†ê‹ Ï𣌠効ÜOˆ¶ºîô¬ñ„꘠ݬí HøŠHˆ¶œ÷£˜.

விண்வெளியில் பூமியை போன்று புதிய கிரகம்



வாஷிங்டன்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி, புவியை போன்று வேறு கிரகங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்த மேற்கொண்ட ஆய்வில் தற்போது புதிதாக முடிவு வெளியிடப்பட்டுள்ளது

மொபைலுக்கான சில தளங்கள்


நண்பர்களே வணக்கம். இந்த இடுகையில் மொபைல் போனுக்கான தளங்களைப் பற்றிப் பார்ப்ப்போம். இந்த தளங்களில் மொபைல் சாப்ட்வேர்,ரிங் டோன்,தீம்ஸ் போன்ற எண்ணற்ற வசதிகள் உள்ளன நாம் அதில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.கீழே சில தளங்கள்

December 6, 2011

பேஸ் புக் ,ஜிமெயில், டுவிட்டர் - ஒரே உலாவியில் ஒன்றுக்கும் மேற்பட்ட லாகின்





நாம் பயன் படுத்தும் உலாவிகளில் ஒரே கணக்கை மட்டும் தான் திறந்து பார்க்க முடியும் . ஒரே உலாவிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜிமெயில் பயன்படுத்த
நான் பலக்கட்டுரை களை படித்துள்ளேன் . ஆனால் நாம் இன்று பார்ப்பது முகவும் எளிமையும் அருமையும் மான ஒரு டிப்ஸ் இதை பயன் படுத்தி எத்தனை கணக்கை வேண்டுமானாலும் நீங்கள் திறந்து கொள்ளலாம் . 

உங்கள் உலாவியை கால்குலேட்டராக மாற்றுங்கள்




நாம் பயன் படுத்து உலாவியை பலவிதங்களில் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம் . கணக்கிடுவதற்கு நாம் விண்டோஸ் கால்குலேட்டரையோ அல்லது கூகுள் கால்குலேட்டரையோ தான் பயன் படுத்துவோம் .இனி நாம் உலாவியில் இருக்கும் போதே உலாவியின் ADDRESS BAR-ஐ  நாம் கால்குலேட்டர் ஆக பயன்படுத்த போகிறோம் .

4Shared, Mediafire, ,Rapidshare, Megaupload , Hotfile போன்றவற்றில் உள்ள கோப்புகளை ஒரே இடத்தில எளிதாக தேட


  
  பல பைல் ஹோஸ்ட் தளங்கள் இலவச சேவையை வழங்குவதால் நாம் அனைவரும் நமக்கு பிடித்த கோப்புகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த தளங்களை பயன் படுத்துவோம் .இதற்கென்று பல தளங்கள் இருந்தாலும் ,Rapidshare, Megaupload, 4Shared, Hotfile, Mediafire, Netload, Filesonic போன்ற தளங்களை தான் அதிகம் பயன்படுத்துவோம் .

December 5, 2011

நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க நான்கு சிறந்த இலவச தளங்கள்


ஒரு காலத்தில் இணையதள இணைப்பை வாங்குவதே பெரிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாறிப்போய் விட்டது . ஏன் என்றால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எல்லையை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது . ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் பணமுள்ள வர்கள் மட்டும் தான்ஒரு புதிய இணையதளம் தொடங்கி அதை நடத்த முடியும் . ஆனால் இன்று சாதாரண பாமரான் கூட தளம் ஆரம்பிக்கலாம்  என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இலவச சேவைகளை வழங்கி வருகின்றன . இதனால் இன்று என்ன முடியாத இணைய பக்கங்கள் இணையத்தில் உலா வருகின்றனர் .

பள்ளி மற்றும் அமைப்புகளுக்கு அலுவலக முத்திரை (official seal ) எளிதாக உருவாக்க ..


Image and video hosting by TinyPic
நண்பர்களே நேற்று ஒரு  அருமையான இணையதளம் என் கண்ணில் பட்டது .அது என்ன வென்றால் பள்ளிகள் ,பல்கலைக்கழகங்கள் ,அரசு அமைப்புகள் , நிதி நிறுவனங்கள் , வங்கிகள் , தொழிற்சாலைகள் , தொண்டு நிறுவனங்கள் ,ஆகிய வற்றுக்கு லோகோ வடிவைமைக்கும் ஒரு தளம் லோகோ அல்லது official seal என்றே சொல்லலாம் . பல வடிவமைப்புகளில் இந்த லோகோவை தயாரிக்கலாம்,
மற்ற தளங்களை விட இந்த தளத்தில் பதிவு செய்யாமல் எளிதாக official seal உருவாக்கலாம் .

பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்

jaibhavan.blogspot.com

தமிழ்வலை பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. தினம் தினம் நூற்றுகணக்கான புதிய தமிழ் வலைபதிவர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுவதில் அனைவருக்கும் பெருமையே. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் புதிய வலைபதிவர்களுக்கு மிகவும் அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய இணைய பக்கங்களையும் தொடர்பு ஈமெயில்களையும் இங்கு பதிவு இட்டு உள்ளேன். தேவைபடுபவர்கள் இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்து கொண்டு தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் PDF பைல்களை சுலபமாக மொழி மாற்றம் செய்ய


ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். அந்த சமயத்தில் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும் ஆக நமக்கு தேவையான மொழியில் தேடி நேரம் தான் விரயம் ஆகும். இனி அந்த கவலையே வேண்டாம் வேறு மொழிகளை இருந்தாலும் சுலபமாக ஆன்லைனில் அதை நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 59 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம். (இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்)

ஜிமெயில் டேபில் நாம் படிக்காத மெயில்களின்(Unread Mails) எண்ணிக்கையை வர வைக்க

ஜிமெயிலில் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்தி கொண்டே உள்ளனர். நம்முடைய ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள நாம் படிக்காத மெயில்கள் எத்தனை உள்ளன என்ற எண்ணிக்கை நமது இன்பாக்ஸ் பகுதியில் தெரியும். அதை எப்படி நம் டேபிள் (Tab) தெரிய வைப்பது என காணலாம்.

குரோமில் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு Shortcut key கொடுத்து ஓபன் செய்ய

கூகுள் வழங்கும் குரோம் உலவியில் பல எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன. இதில் இல்லாத பல வசதிகளை நாம் நீட்சிகளை உலவியில் நிறுவினால் பெற்று கொள்ளலாம்.    அதில் ஒரு முக்கிய மான வசதி இது. நாம் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு shortcut key செட் செய்து இந்த shortcut கீயை அழுத்தினால் அந்த இணைய தளம் ஓபன் ஆவது போல செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நாம் ஒவ்வொரு முறையும் இந்த பெயர்களை அடிக்க வேண்டியதில்லை இந்த ஷார்ட்கட் கீயை அழுத்தினால் உடனே அந்த தளம் நமக்கு திறந்து விடும். 

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert


நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  

பிளாக்கரில் Static Page-ல் தெரியும் Readmore பட்டனை மறைக்க


பிளாக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பதவிகளில் முகப்பு பக்கத்தில் முழு பதிவையும் காட்டாமல் சிறு முன்னோட்டம் மட்டும் தெரியும் படி வைத்து கீழே Readmore என்ற பட்டன் வைத்திருப்போம். வாசகர்கள் அந்த Readmore பட்டனை அழுத்தியவுடன் நம் முளுபதிவையும் திறக்கும் படி வைத்திருப்போம் இதை நம்மில் பெரும்பாலனவர்கள் உபயோகிக்கிறோம்.

December 4, 2011

நம்முடைய பேரை வித விதமான டிசைன்களில் கொண்டுவர


நம்முடைய எழுத்தை நாம் நினைத்த மாதிரி விதவிதமான டிசைன்களில் எப்படி கொண்டு வருவது என்று இங்கு காண போகிறோம். இதில் 54 வகையான டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் இன்னொமொரு சிறப்பு என்ன வென்றால் நாம் உருவாக்கிய எழுத்துகளின் HTML CODE அவர்களே கொடுத்து விடுகிறார்கள் இதன் மூலம் நாம் நம்முடைய தளத்தின் சைடு பாரில் அதை பதிந்து கொள்ளலாம். இங்கு நான் இதன் மூலம் நம் நண்பர்களின் பெயர்களை உருவாக்கியுள்ளேன் சில மாதிரிகள் கீழே

பிலாக்கருக்கு தேவையான அழகான 20க்கும் மேற்ப்பட்ட மெனுபார் (Navigation Bar)



நம்முடைய பிலாக்கரில் சேர்க்க 20 க்கும் மேற்ப்பட்ட வித விதமான அழகான மெனுபாரை எப்படி நம்முடைய தளத்தில் சேர்ப்பது எப்படி என்று காணபோகிறோம்.
     

வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக

Nero Multimedia Suite 10: video editing, disc burning, and backup software  




Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.

MS Office 2010 Full Version வேண்டுமா

or try now                     
MS Office 2010 ஐ Full Version ஆக்குவது பற்றி பார்ப்போம். முதலில் கிழே உள்ள Linkல் MS Office 2010 Free Trial ஐ Download பண்ணிக்கொள்ளவும்.

அனைத்து கணினிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்- Auto Shutdown




இன்றைய உலகில் கணினி உபயோகிக்காத இடமே இல்லை. சிறிய கடைகள் முதல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் வரை உபயோகித்து கொண்டிருக்கும் இந்த கணினியின் செயல் பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நம் கணினியில் நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நம் கணினியில் அவசியமாகிறது.

HardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன் - Disk Manager


விண்டோசில் Hard Diskனை OS நிறுவும்போது தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம்.முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த Hard Diskனை மீண்டும் நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் இந்த மென்பொருள் கீயுடன் கிடைக்கின்றது

விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்


கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும்  மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். இவைகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பயன் பெறவும்.

மிகப் பெரிய கோப்புகளை மின் அஞ்சல் அனுப்ப


இன்றைய உலகில் மின் அஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்துபார்கவே பயமாக உள்ளது. (மின் அஞ்சல் இல்லாமல் ஒரு நாள் அல்லது கணினி இல்லாமல் ஒரு நாள் என்று யாரவது ஒரு பதிவு போடலாம்). இந்த மின் அஞ்சல் அனைத்தும் இலவச சேவை என்பது சிறப்பு. (மின் அஞ்சல் அனைத்தும் கட்டணமானால் இன்னொரு பதிவும் போடலாம்).

கணினிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் - Microsoft Security Essential


இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு செய்து விடலாம். எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான டேட்டாக்களை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.

December 3, 2011

பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]



இணையத்தில் உலவிகளுக்கான போட்டியில் பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம். குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பாக்ஸ் வெளிவிட்டாலும்(கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்) கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது. Internet Explorer உலவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

December 2, 2011

ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க பிளாக்கரில் பதிவுக்கு கீழே அழகான Email Subscribe Widget


நம்முடைய பதிவு பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புவாகள். ஒரு தளத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வாசகர்களே. ஆகவே வாசகர்களை பெருக்க நாம் பல வழிகளை கையாள்கிறோம். இதில் முக்கியமான வசதியான feedburner வழங்கும் Email Subscribe Widget நம் பிளாக்கில் வைத்து அதன் மூலம் ஈமெயில் வாசகர்களை பெருக்கி கொள்கிறோம்.

பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி?


பிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் சைட்பாரில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளாக்கர் பதிவில் இந்த வசதியை நேரடியாக இணைக்க முடியாது

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி - Youtube Space Lab



வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.

1,734 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்


அரசு ஆரம்பப் பள்ளிகளில், 1,734 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக,
 9,300 பேருக்கு, நாளை (3ம் தேதி), நாளை மறுநாள் (4ம் தேதி), மாநிலம் முழுவதும் 
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கின்றன.வேலை வாய்ப்பு அலுவலக மாநில பதிவு
 மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

December 1, 2011

உங்களின் வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய-how to find your blog affected by viruses?


தொழில் நுட்ப வளர்ச்சியில் எங்கோ போய்கொண்டிருக்கும் உலகத்தில் பல்வேறு பயன்களும் புதிய தொழில்நுட்பங்களும் நமக்கு கிடைத்தாலும் இதற்க்கு எதிர்மறையான பிரச்சினைகளையும் நாம் தினமும் சந்திக்க வேண்டி உள்ளது. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் மற்றும் மால்வேர்கள் எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருட்கள். இந்த வைரஸ் பிரச்சினை இணையதளங்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. வைரஸ்களை பரப்பவே இணையத்தில் பல இணைய தளங்கள் உள்ளன. வைரஸ் பாதித்த தளங்களில் இருந்து ஏதேனும் விட்ஜெட்டையோ அல்லது அந்த தளத்தின் லிங்கோ உங்களின் பிளாக்கில் கொடுத்து இருந்தால் உங்களுடைய தளத்திற்கும் அந்த வைரஸ் பரவிவிடும். இந்த வைரசினால் பெரிய தளங்கள் கூட பாதிப்பை அடைந்து இருக்கின்றனர்.

பிளாக்கரில் புதிய வசதி - Open this link in a new window



இந்த பிளாக்கர் பல புதிய வசதிகளை அடிக்கடி வாசகர்களுக்கு அளிப்பார்கள். அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் புதிய வசதி Open this link in new tab வசதி. இந்த வசதி என்ன அதை எப்படி உபயோகப்படுத்துவது எப்படி என கீழே பார்ப்போம். நாம் பதிவில் வாசகர்களுக்கு ஏதேனும் தகவல்களோ அல்லது தரவிறக்கம் செய்யவோ மற்ற தளத்தின் லிங்க் கொடுத்து இருப்போம். அல்லது உங்களுடைய முந்தைய பதிவின் லிங்கை இந்த பதிவில் கொடுத்து இருப்பீர்கள். வாசகர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் ஓபன் ஆபாமல் அந்த பதிவிலேயே ஓபன் ஆவதால் இருக்கிற பதிவு மறைந்து விடும். வாசகர்கள் திரும்பவும் புதிய விண்டோவை திறந்து உங்களின் பதிவுக்கு வருவார்கள் அல்லது வராமலே சென்று விடுவார்கள்.

இன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1


நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆடியோக்கள் போன்றவற்றை நம் கணினியில் டவுன்லோட் செய்து ரசிப்போம்.அப்படி டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் பொழுது நம் கணினியில் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது நமது இன்டர்நெட்டில் பிரச்சினை ஏற்பட்டாலோ நாம் டவுன்லோட் செய்வது தடைபட்டு விடும். திரும்பவும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். மற்றும் நீங்கள் டவுன்லோட் செய்யும் பைல் மிகவும் மெதுவாக டவுன்லோட் ஆகும் இது போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்ம விடுவிக்க வந்துள்ளது Free Download Manager என்ற அறிய இலவச மென்பொருள்.

பிளாக்கர் பயன்பாட்டின் எல்லைகள் அறிவோம்





பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூவை உருவாக்கி அதன் மூலம் நாம் பல நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், நட்பு வட்டத்தை அதிகர்க்கவும் பாலமாக நம் அனைவருக்கும் உள்ளது இந்த பிளாக்கர் தளம். என்னதான் எண்ணிலடங்கா வசதியை பெற்று இருந்தாலும் இதற்கும் ஒரு எல்லை என்பது உண்டு. நாம் கீழே பிளாக்கர் தளத்தின் எல்லைகள் யாவை என்பதை கீழே காணலாம்