About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 21, 2011

இனி 1 முதல் 6-ம் வகுப்பு வரை ஒரே ஒரு பாடப்புத்தகம்!


சென்னை: மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் தமிழ்நாட்டில் முப்பருவமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முழுக்கல்வி ஆண்டிற்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முறையிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை குறைவதுடன், பயம், மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாடநூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்கு பரிந்துரையை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வி செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களை கணக்கீடும்போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன.

*1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

*7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தை தொகுதி 1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலை தொகுதி-2 எனவும், ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்கள் வெளியிடப்படும். தமிழ்வழி, ஆங்கில வழி ஆகிய 2 வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

*சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாடநூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாக பிரிக்கப்படாமல் வருடத்துக்கு ஒரு புத்தகமாக, இப்போது நடை முறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும். 9, 10 வகுப்புகளுக்கு முப் பருவமுறை 2012-13-ல் நடை முறைப்படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையை பின்பற்றி பாடநூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: