About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 8, 2011

பிளஸ் 2, 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : தேர்வு இயக்ககம் அறிவிப்பு


சென்னை : பிளஸ் 2, 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள், வரும் மார்ச் பொதுத் தேர்வில், தேர்ச்சி பெறாத எல்லா பாடங்களையும், சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் எழுதலாம் என, அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்தி: அரசு தேர்வுத் துறையால், மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுகளில், ஒன்று முதல் அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை, தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விதி, இப்போது தளர்வு செய்யப்படுகிறது. அதன்படி, வரும் 2012 ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வில், எண்ணிக்கை வரம்பின்றி, எத்தனை பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையோ, அத்தனை பாடங்களையும் எழுதலாம்.
விண்ணப்பங்கள் வினியோகம் : வரும் 2012, மார்ச்சில் நடக்கும் மேல்நிலை பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள், டிச., 5 முதல் வினியோகிக்கப் படுகிறது. இதுவரை, தேர்ச்சி பெறாத பாடங்களை எழுதுவதற்காக, பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் "கோடிங் சீட்'டை மடிக்காமல், டிச., 20ம் தேதி மாலை 5.45 மணிக்குள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.


No comments: