About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 7, 2011

விண்வெளியில் பூமியை போன்று புதிய கிரகம்



வாஷிங்டன்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி, புவியை போன்று வேறு கிரகங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்த மேற்கொண்ட ஆய்வில் தற்போது புதிதாக முடிவு வெளியிடப்பட்டுள்ளது
. அதன்படி, பூமியிலிருந்து 600 ஒளி வருடங்கள் தொலைவு கொண்டதும் வருங்காலத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்டதுமான கெப்ளர் 22பி என்ற பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கிரகத்தில் போதுமான நிலம் மற்றும் தண்ணீர் ஆகியவை உள்ளது. மேலும், வெளிப்புறம் 72 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. வருடத்திற்கு 290 நாள்கள் கொண்டதுடன் வளிமண்டல அமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. எனவே, வருங்காலத்தில் பூமியை தவிர்த்து பிற கிரகங்களில் மனிதன் மற்றும் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

No comments: