About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 30, 2012

இடமாறுதல் விண்ணப்பங்களை பெற தடை - ஆசிரியர்கள் அதிர்ச்சி.

திருநெல்வேலி: இடமாறுதல் விண்ணப்பங்களை பெற திடீர் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொடக்க கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
ஆனால் திடீரென இந்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டாம் என்றும் ஆசிரியர்களுக்கும், விண்ணப்பங்ளை பெற வேண்டாம் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் தொடக்க கல்வித்துறை ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பங்களை அளித்தால்தான் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு கவுன்சிலிங் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் உள் மாவட்ட மற்றும் வெளி மாவட்ட இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் விண்ணப்பங்கள் பெறப்படாத சூழ்நிலையில் இதுபோன்று கவுன்சிலிங் நடத்த வாய்ப்பு இல்லை. இதனால் நீண்ட காலமாக வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தகுதியான ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இடமாறுதல் ஆணை கிடைக்காத நிலை ஏற்படும் என்று கருதுகின்றனர்.
எனவே, உடனடியாக இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பங்களை பெற்று அனைத்து காலி பணியிடங்களையும் அறிவித்து குறிப்பிட்ட நாட்களில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் அந்தந்த மாவட்டங்களில் உள் மாவட்ட மற்றும் வெளி மாவட்ட இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த கல்வித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை ஆசிரிய, ஆசிரியைகள் விரும்புகின்றனர்.

No comments: