About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 25, 2012

ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை .

தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில்தமிழ் பாடத்திற்கான வினா விடைகளை வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்

2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா
4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்
5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்
6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி
7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்
8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை
9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்
11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்
16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்
17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி
18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்
19. அகத்து உறுப்பு யாது - அன்பு
20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்
21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்
24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு
26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்
28.  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது  - நாலடியார்
29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் -  பாட்டுக்கொரு புலவர்.
30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை
32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை
33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை
34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13
35  சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.
36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை
37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்
38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி
39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை
40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்
41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக
42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை
43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை
44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்
45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.
47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.
48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த  காலம் - கி.பி.2
49.  பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.
50 குறிஞ்சித் திரட்டு என்ற  நூலை எழுதியவர் -  பாரதிதாசன்
51.சுப்புரத்தினம் 'ஏர் கவி'  என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்
52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19
53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்
54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2
55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் -  5
56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்  - 2
57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்
58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்
60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.

No comments: