About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 28, 2012

முப்பருவ கல்வி முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு

முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது
:
வரும் கல்வியாண்டில் (2012-13), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, முப்பருவ கல்வி முறைக்கான பாட நூல்களையும், முழுமையான மதிப்பீட்டு முறைப்படி கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்வது குறித்து, ஆசிரியர்களுக்கான வழிமுறை கையேட்டையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.

புதிய திட்டம் குறித்து, மண்டல அளவில் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களை, ஒன்றிய கருத்தாளர்களாகக் கொண்டு, 26ம் தேதி 50 சதவீத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மீதமுள்ள, 50 சதவீத ஆசிரியர்களுக்கு, 27ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. 412 ஒன்றியங்களில், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மே இறுதி வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

No comments: